Skip to main content

ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஏ.ஆர் ரஹ்மான்.... டென்ஷனில் ஷங்கர் !  

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
2.0

 

 

 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்  '2.O'. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடித்திருக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இந்தியாவிலேயே ரூ550 கோடிக்கு மேல் செலவழித்து மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் '2.O' படத்தின் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு இயக்குனர் ஷங்கர் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 14ஆம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். மேலும் கிராபிக்ஸ் பணிகள் முடிந்த பிறகுதான் பின்னணி இசை அமைக்க இருப்பதாகவும், பின்னணி இசைக்கு குறைந்தது ஒரு மாதமாவது தனக்கு வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்ட்ரிக்ட்டாக கேட்டுள்ளதால் இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0