மலையாள டி.வி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சபரிநாத். அமலா, மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தபோது சபரிநாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதன்பின் உடனடியாக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் சபரிநாத்துக்கு வயது 43 ஆகும். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சபரிநாத்தின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.