/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selvaraghavan_6.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான செல்வராகவன், 'நானே வருவேன்', 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய படங்களுக்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது, செல்வராகவனுக்கு அறிமுகப்படமாகும்.
இந்த நிலையில், ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடிப்பது குறித்து இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "23 வருடங்களாக திரைப்படங்களை உருவாக்கி வந்தேன். இன்று முதல் நான் நடிகராகிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)