![selvaraghavan yogi babu movie update](http://image.nakkheeran.in/cdn/farfuture/lcdi-g9em5bVgZ2llNf48jWmaZkFkoyKraGalKC8E-M/1690798898/sites/default/files/inline-images/176_18.jpg)
இயக்குநர் செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ஃபர்ஹானா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார். மேலும் தனுஷின் 50வது படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் செல்வராகவன் அடுத்ததாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் செல்வராகவனோடு யோகிபாபு, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிக்கின்றனர். ஷைன் டாம் சாக்கோ, ராதா ரவி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.