/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Selvaragavan_0.jpg)
இயக்குநர் செல்வராகவனின் படங்கள், வெளியான பத்தாண்டுகளுக்கு பிறகு தான் கொண்டாடப்படும் என்று சொல்வதுண்டு. அதற்கேற்றார் போல் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்கில் திரையிட்டபோது பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆனால், இதை இப்போதே பார்க்க முடியவில்லையே. பத்து வருடம் கழித்தெல்லாம் எப்படி பார்ப்பது போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். அதை அவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவரது படம் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம்என்.ஜி.கே.இப்படத்தில் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், இளவரசுமற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேபெற்றது. வணிக ரீதியில் பெரிய வசூலையும் ஈட்டவில்லை. இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளான நிலையில் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் “நேர்த்தி என்று எதுவும் இல்லை. எங்களிடம் குறைபாடுகள் உள்ளன.அது நல்லது. ஒரு வைரத்தை போன்றது” என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)