/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/354_13.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 26ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. கடந்த 7ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது செல்வராகவன் பேசுகையில், “ரஹ்மான் சார் இருக்கும் நிகழ்ச்சியில் நான் வந்திருக்கிறேன் என்பதில் தனியாக ஒரு சந்தோஷம். எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை அவருக்கு என்னைவிட வெறித்தனமான ரசிகர் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் கடலில் குதி என்றாலும் குதித்து விடுவேன்
என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கே கடவுள் கொடுத்த பரிசாக நான் அவரைப் பார்க்கிறேன். ஆல்பத்திற்கு ஆல்பம் அவர் தன்னை புதிதாக மேம்படுத்திக்கொண்டே இசையமைத்து வருவதை பார்த்து வருகிறேன். அந்த ஆச்சர்யத்தில்தான் வாழ்க்கை போகிறது. வாழ்க்கை முழுவதும் அவரிடம் இருந்து நிறைய பாடல்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)