Skip to main content

நடிகை ராதிகாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பதிலடி! 

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

simbu

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர்
வெளியிடப்பட்டது.

 

மேலும், இந்தப் படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றைச் சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

 

இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், “தன் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் முழு உரிமையும் நடிகருக்கு உண்டு. ஆனால், சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது. இம்ரான்கானாக ஷாருக்கான் நடிக்க முடியுமா? அவ்வளவுதான்.

 

Ad

 

ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐ.பி.எல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா?. இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டைத் தீர்க்குமா? என் மரியாதைக்குரிய சகோதரி ராதிகா சரத்குமார்...

 

சகோதரி குஷ்புவுக்கு வணக்கம். முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க. இப்ப நடிக்க முடியுமா? சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற. சமூகப் பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைவரும் வந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதி விலகிய படத்தில் நடிக்கும் பிரிட்டன் நடிகர்

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

actor dev patel joining muttiah muralitharan biopic 800 movie

 

பாலிவுட் திரையுலகில் ஆண்டுதோறும் பல்வேறு பயோபிக் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை படமாக்க இயக்குநர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சச்சின், அசாருதீன், தோனி என இதுவரை வெளியான கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் படங்கள்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

அந்த வரிசையில் அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்  திரைப்படம் '800' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து '800' படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார்.

 

இந்நிலையில் விஜய் சேதுபதி விலகிய கதாபாத்திரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நடிகர் தேவ் பட்டேல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'ஹோட்டல் மும்பை', 'சாப்பி' படங்களில் நடித்துள்ளார். தேவ் பட்டேல் தற்போது 'மங்கி மேன்' என்ற ஆங்கில படத்தை எழுதி இயக்கி மற்றும் நடித்தும் வருகிறார். 

 

 

Next Story

முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை அறிவிப்பு!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

muttiah muralithran

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன், தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை கடந்த 17ஆம் தேதி கொண்டாடிய நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (18.04.2021) அனுமதிக்கப்பட்டார். இதயம் சம்பந்தமான சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

 

இந்தநிலையில், அங்கு அவருக்கு அஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதனை அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. அஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். டிஸ்சார்ஜ்க்குப் பிறகு முரளிதரன் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் எனவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.