/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virumandi.jpg)
'க/பெ. ரணசிங்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விருமாண்டி.விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இயக்குனர் விருமாண்டியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்த நிலையில், இயக்குனர் விருமாண்டியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பரதன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார். படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது படத்தின் முதற்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)