![sarpatta 2 update](http://image.nakkheeran.in/cdn/farfuture/3eEDAvjDUjoTBap3_D3f_djtBzfgMseizyHKbFczd_o/1685366649/sites/default/files/inline-images/51_44.jpg)
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் ஆர்யாவின் 34வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாகவுள்ளது.
அந்த வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்யா, படம் குறித்தும் உருவான விதம் பற்றியும் நிறைய விஷயங்களைப் பேசினார். மேலும், தனது அடுத்த படம் குறித்த தகவலையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "மிஸ்டர் எக்ஸ் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கிறேன். மனு ஆனந்த் இயக்குகிறார். அதை முடித்து விட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா 2' படத்தில் நடிக்கவுள்ளேன். படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.