Skip to main content

விஜய காந்தை தொடர்ந்து ரஜினி, கமல், விஜயை சந்திக்கும் சங்கரதாஸ் அணியினர்...

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள். அவரை சந்தித்த பிறகு நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் கூட்டாக போட்டியளித்தனர்.
 

vijay kanth

 

 

இது குறித்து அவர்கள் கூறும்போது, "விஜயகாந்த் அவர்களை சந்தித்து நாங்கள் ஆதரவு கேட்டிருக்கிறோம். அவரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் நிறைய செய்திருக்கிறார், கடன்களை அடைத்திருக்கிறார். விஜயகாந்த் சார் எங்கள் கையப்பிடித்து நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என சொல்லி எங்களை வாழ்த்தியிருக்கிறார். தொடர்ந்து ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், விஜய் சார் ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம். 
 

நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஓய்வு ஊதிய உதவித்தொகை வழங்கப்படும். நாடக நடிகர்கள் எல்லாம் சிரமத்தில் இருக்கிறார்கள், அவர்களை கைதூக்கி விடுவது தான் எங்கள் நோக்கம். நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. இதில் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி ஒரு விஷயமே இங்கு இல்லை.
 

பாண்டவர் அணி உண்மையில் எதையும் சரியாக செய்யாததால் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். கட்டிட வேலைகள் எல்லாம் ஒன்றரை வருடமாக அப்படியே பாதியில் நிற்கிறது. எங்கள் நோக்கமே அந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பது தான். அதில் தான் எங்கள் முழு கவனமும் இருக்கிறது. வெற்றி ஒன்று தான் எங்கள் இலக்கு. எங்கள் அணியில் ரமேஷ் கண்ணாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து மேல் முறையீடு செய்திருக்கிறோம்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நான் ஓர் அன்பான நண்பரை இழந்துவிட்டேன்” - விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் உருக்கம்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Prime Minister melts over Vijayakanth's demise and says I have lost a dear friend

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், மறைந்த விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடிதனது வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “சில  நாட்களுக்கு முன்பு, நாம் பெரிதும் போற்றப்படும் மற்றும் மதிக்கப்படும் விஜயகாந்தை இழந்தோம்.  மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை வாழ்ந்து, உண்மையிலேயே அனைவருக்கும் ஒரு கேப்டனாக அவர் இருந்தார். தனிப்பட்ட முறையில், விஜயகாந்த் எனக்கு மிகவும் அன்பான நண்பராக இருந்தார்.

விஜயகாந்த் பன்முக ஆளுமை கொண்டவர். இந்திய சினிமா உலகில், விஜயகாந்தை போல் ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும் தான் அழியாத முத்திரையை பதித்துள்ளனர். அவரது ஆரம்ப காலங்களிலும் சினிமாப் பணிகளிலும் ஈர்க்கப்பட வேண்டியவை ஏராளம். தமிழ் சினிமாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து உச்சம் வரையிலான அவரது பயணம் வெறும் நட்சத்திரக் கதை மட்டுமல்ல, இடைவிடாத முயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பின் ஒரு சரித்திரம். அவர் புகழுக்காக சினிமா உலகில் நுழையவில்லை. அவரது ஒவ்வொரு படமும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல், அதன் காலத்தின் சமூக நெறிமுறைகளை எதிரொலித்தது. 

அநீதி, ஊழல், வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் பாத்திரங்களை அவர் நடித்திருக்கிறார். சமூகத்தின் நற்பண்புகள் மற்றும் தீமைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவரது படங்கள் இருந்தன என்று சொல்ல வேண்டும். விஜயகாந்தின் தாக்கம் வெள்ளித்திரையில் மட்டுமல்ல, அரசியலிலும் இருந்தது. சமூகத்திற்கு இன்னும் விரிவான முறையில் சேவை செய்ய விரும்பினார். தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி என இரு தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தியபோது அவர் அரசியல் களத்தில் இறங்கினார். அத்தகைய சூழலில், மூன்றாவது மாற்றத்தை முன்வைப்பது தனித்துவமானது.

2005 இல் அவர் நிறுவிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) சித்தாந்தத்தில் தேசியவாதம் மற்றும் சமூக நீதிக்கான அவரது சொந்த வலியுறுத்தல் பிரதிபலித்தது. தமிழ்நாட்டின் இருமுனை மற்றும் போட்டி நிறைந்த அரசியலில், 2011 இல் அவர் தனது கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திலேயே பிரதான எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், எங்கள் கட்சியின் கூட்டணியில் போட்டியிட்டு 18.5% வாக்குகளைப் விஜயகாந்த் பெற்றிருந்தார். சேலத்தில் நாங்கள் நடத்திய கூட்டுப் பேரணியை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். அங்கு அவரது அனல் பறக்கும் பேச்சாற்றலையும், மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் நான் கண்டு ஆச்சரியப்பட்டேன். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்தித்தபோது, அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.

தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் மருத்துவத்திலும், கல்வியிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார். விஜயகாந்தின் மறைவில், மக்கள் தங்கள் நேசிக்கும் நட்சத்திரத்தை இழந்துள்ளனர். பலர் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால் நான் ஓர் அன்பான நண்பரை இழந்துவிட்டேன். நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். 

தைரியம், தாராள மனப்பான்மை, ஞானம் மற்றும் வைராக்கியம் ஆகியவை ஒரு வெற்றிகரமான தலைவரின் நான்கு முக்கிய கூறுகள் என்பதை குறள் பேசுகிறது. விஜயகாந்த் உண்மையிலேயே இந்த பண்புகளை உள்ளடக்கியிருந்தார். அதனால்தான் அவர் மிகவும் பரவலாக மதிக்கப்பட்டார். அவரது பாரம்பரியம் அவரது ரசிகர்களின் இதயங்களிலும், தமிழ் சினிமாவின் வரலாற்றிலும், பொது சேவையிலும் தொடர்ந்து வாழும். அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான விஜயகாந்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.