Skip to main content

சிம்பு பட நடிகை ரகசிய திருமணம்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

sana khan

 

 

தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதன்பிறகு ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

 

இந்நிலையில், திடீரென சினிமா படங்களில் நடிக்கப்போவதில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீண்ட கடிதம் ஒன்றை தனது ரசிகர்களுக்காக பதிவிட்டிருந்தார். அதில் ஏன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்பதை குறிப்பிட்டிருந்தார்.

 

இந்தநிலையில் சனாகான்- தொழில் அதிபர் முப்தி அனாஸ் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர். சூரத் நகரில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் தனக்கு நடைபெற்ற திருமணம் பற்றி சனாகான் இதுவரை எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனி ஒருபோதும் ஹிஜாப்பை அகற்ற மாட்டேன்” - சிம்பு பட நடிகை உறுதி

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Sana Khan reveals why she started wearing hijab

 


பிரபல பாலிவுட் நடிகை சனா கான் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள சனா கான் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாகஇருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சையது என்பவரை திருமணம் செய்து கொண்ட சனா கான் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். 

 

இந்நிலையில் தனது வாழ்வின் கடுமையான நாள் குறித்தும், ஹிஜாப் அணிவது குறித்தும் சனா கான் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ் பணம் என எல்லாம் இருந்தன. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. அது மிகவும் கடுமையான நாட்களாக இருந்தன. அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் எனக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ரமலான் நாளன்று ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையில் நான் இருந்தேன். அது எனக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த கல்லறையில் ‘உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்தநாள். அன்று முதல் நான் ஹிஜாப் அணிய தொடங்கினேன். அன்று முதல் இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என முடிவெடுத்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

“சினிமாவிலிருந்து விலகுகிறேன்...” - நடிகை சனா கான் கடிதம் 

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

sana khan


தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதன்பிறகு ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

 

இந்நிலையில், திடீரென சினிமா படங்களில் நடிக்கப்போவதில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “சகோதர சகோதரிகளே, இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நான் இருக்கிறேன்.

 

பல வருடங்களாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். திரைத்துறையில் நான் இருந்த காலக்கட்டம் வரை எனக்கு நிறைய புகழும், பெருமையும், செல்வமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ளன. அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

 

ஆனால், கடந்த சில நாட்களாக எனக்குள் ஏற்பட்டுள்ள ஒரு உணர்தல் என்னை ஆட்கொண்டுள்ளது. இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய உண்மையான நோக்கம் பணத்தையும், புகழையும் துரத்துவதற்குத்தானா? மனிதன் தன் வாழ்க்கையைத் தேவைப்படுபவர்களுக்கு, வறியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அந்த வாழ்க்கை கடமையில் ஒரு அங்கம் இல்லையா?

 

ஒரு நபர், தான் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்பதையும், அவர் இறந்த பிறகு அவருக்கு என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

 

இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீண்ட காலமாக நான் பதில் தேடி வருகிறேன். அதுவும் குறிப்பாக என் மரணத்துக்குப் பின் எனக்கு என்ன ஆகும் என்கிற கேள்விக்கு.

 

எனது மதத்தில் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது, பூமியில் இந்த வாழ்க்கையே, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பதை உணர்ந்தேன்.

 

தன்னைப் படைத்தவனின் ஆணைக்கேற்ப இந்த அடிமை, வாழ்வதும், பணத்தையும், புகழையும் மட்டுமே ஒரே நோக்கமாகக் கொள்ளாமல் இருப்பதுமே சிறப்பாக இருக்கும். மனிதன் பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வதைத் தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும், தன்னைப் படைத்தவன் காட்டும் பாதையைப் பின்பற்ற வேண்டும்.

 

Ad

 

எனவே, இன்று நான் ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன். இன்றிலிருந்து எனது திரைத்துறைக்கு, அதற்கேற்ற வாழ்க்கை முறைக்கு நிரந்தரமாக விடை கொடுத்து, என்னைப் படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி மனித இனத்துக்குச் சேவை செய்ய முடிவெடுத்துள்ளேன்.

 

அனைத்துச் சகோதர சகோதரிகளும் எனக்காக அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அவர் எனது மனந்திரும்புதலை ஏற்க வேண்டும். என்னைப் படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி வாழவும், மனித இனத்துக்குச் சேவை செய்யவும் நான் எடுத்திருக்கும் முடிவின் படி இணக்கத்துடன் வாழ எனக்குத் திறனைத் தந்து, அதில் உறுதியுடன் இருக்கும் மன வலிமையைத் தர வேண்டும்.

 

எனவே, இனி எந்தவிதமான பொழுதுபோக்குத் துறை தொடர்பான வேலைகளுக்கும் என்னைத் தொடர்புகொள்ள வேண்டாம் என அனைத்துச் சகோதர சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.