/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/24_75.jpg)
திரிவிக்ரம் ஸ்ரீ னிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் கமிட்டாகியிருந்தனர். ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்படத்தின் வீடியோ ஒன்று மகேஷ் பாபுவின் தந்தையான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
இப்படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகியுள்ளதாகத்தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை எனச் சொல்லப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தமனும் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜாஹெக்டேவுக்கு பதில் சம்யுக்தா நடிக்கவுள்ளதாகத்தற்போதுதகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகையான சம்யுக்தா, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தாண்டு தெலுங்கில் தனுஷுக்கு ஜோடியாக 'சார்' மற்றும் சாய் தரம் தேஜூக்கு ஜோடியாக 'விருபக்ஷா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)