/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/118_26.jpg)
பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைதளதம் வாயிலாக தங்களது இரங்கலைத்தெரிவித்தனர்.
மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டில் விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா, சூரி, ஷங்கர் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தனர். அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், "ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. என்ன சொல்றதுனே தெரியல. ஒரு 15 நாள் முன்னாடி தான் பேசிக்கிட்டு இருந்தேன். ரொம்ப வருத்தமா இருக்கு" என்றார்.
சமுத்திரக்கனி பேசுகையில், "அந்தகண்என்ற படத்தின் படப்பிடிப்பின் போது மருத்துவமனையில் இருந்து மனோபாலா சார் நடிக்க வந்திருந்தார். அவரிடம் ஏன் மருத்துவமனையில் இருந்து வந்தீங்க என்று கேட்டேன். அதற்கு, ‘இல்லடா... நான் இறந்துட்டேன்னு செய்திபோட்டாங்க. நான் இருக்கேன்னு ஒரு ஃபோட்டோ எடுத்து உடனடியா போடு’என்று சொன்னார். வாரத்துக்கு ஒரு முறை போன் செய்துவிடுவார். கூடப் பொறந்தவங்க கூட அப்படி விசாரிக்க மாட்டாங்க. அப்படி ஒரு அண்ணன். கடைசி நொடி வரையும் உழைச்ச ஒரு மனிதர்" என்றார்.
நாசர் பேசுகையில், "எல்லாரும் ஒரே உணர்வோடு தான் இருக்கோம். மனோபாலாவோடு பழகியவர்கள் யாரும் மேலோட்டமாக பழகியவர்கள் இல்லை. ரொம்ப நெருக்கமானநண்பனாகத்தான் பழகியிருக்கிறார்கள். எவ்ளோ பெரிய சீரிஸானா விஷயம் நடந்தாலும் அதையே காமெடியாக்கி சொல்லி எங்களுடைய மன அழுத்தத்தை போக்குவார். அவர் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறேன். அவர் எவ்வளவுஅழகா கதை எழுதுவாரோ அவ்வளவுஅழகாக சமைப்பார் என்பது எவ்வளவுபேருக்கு தெரியும் என தெரியவில்லை" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)