/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/367_2.jpg)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
சமீபத்தில் கூட ஒரு விருது விழாவில் சல்மான் கானிடம், 'உங்களுக்குப் பிடித்த பாடல் எது' என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, 'ஊ அண்டவா மாமா' பாடலை குறிப்பிட்டார். இதனை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பைத் தெரிவித்திருந்தார். இதனிடையே 'புஷ்பா – தி ரைஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இந்நிலையில் 'புஷ்பா 2' படத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் உள்ளதாகவும், அதில் சமந்தா நடித்தால் இந்த பாடலும் ஹிட் ஆகும் எனவும் படக்குழு நம்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு இப்படத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் 'புஷ்பா 2' படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிக்க இருந்து, பின்பு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. அதனால் 'புஷ்பா 2' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)