Skip to main content

ஆன்லைனில் ஏமாற்றப்பட்ட பிரபல இசையமைப்பாளர்! 

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
sam cs

 

 

'புரியாத புதிர்', 'விக்ரம் வேதா', 'கைதி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இவருடைய பின்னணி இசை மிகவும் தனித்துவம் வாய்ந்தது.

 

இந்நிலையில் சாம் சி.எஸ் ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாற்றப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

 

இதுகுறித்து அவர் பதிவிடுகையில், "என்னுடைய சகோதரருக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு ஆப்பிள் வாட்ச் ஆன்லைனில் வாங்கினேன். அது வந்த போது அதைப் பார்த்து அதிர்ச்சி ஆனோம். அதில் கற்களை மிக அழகாகப் பேக் செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். அது பற்றி புகார் அளித்த போது அந்த நிறுவனம் எங்களது புகாரை நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறி விட்டனர். இதனால் தயவுசெய்து இந்த நிறுவனத்திலிருந்து வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என சாம் சி. எஸ் கூறியிருக்கிறார்.

 

 

இந்தப் பதிவில் கமெண்ட் செய்யும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். பிரபல இசையமைப்பாளருக்கே இந்த நிலைமையா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சாம்.சி.எஸ் அடுத்த பல படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு பிரம்மாண்ட படம்தான் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்ரி'. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலிவுட் தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி.எஸ்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Sam C.S. has composed music for Bollywood series

 

'ஓர் இரவு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சி.எஸ்., விக்ரம் வேதா படத்தின் மூலம் பலரது கவனத்தைப் பெற்றார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் பலரின் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கைதி, அடங்கமறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி  போன்ற படங்களுக்கு  இசையமைத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

 

இந்த நிலையில் இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். இத்தொடர் ஹாலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு வெளியானது. ஆறு அத்தியாயங்களாக வெளியான இத்தொடர் தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. 

 

இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இத்தொடர் மூலம் இந்தியிலும் பிரபலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

பாலிவுட்டை அதிரவைக்கும் சாம் சி.எஸ்

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

sam cs vikram vedha theme music goes viral

 

'ஓர் இரவு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சி.எஸ், விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் திரை உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதனைத்தொடர்ந்து கைதி, அடங்கமறு,  சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி  போன்ற படங்களுக்கு  இசையமைத்து பலரின் ஃபேவரைட்டாக மாறிப்போனார். 

 

இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் ட்ரைலர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் பதிப்பின் பின்னணி இசையை போலவே இந்தி பதிப்பின் பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் சாம் சி.எஸ்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு, அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதாக கூறப்படுகிறது.  இதனிடையே இந்தி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.