Skip to main content

சிவகார்த்திகேயன் படத்தை பார்க்க விரும்பும் சல்மான் கான்..! என்னவா இருக்கும்..?

Body

சல்மான் கான் நடித்து, பிரபுதேவா இயக்கியுள்ள 'தபாங் 3' படத்தை தமிழில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் விநியேகம் செய்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டீசரை நடிகர் சல்மான் கான் சமீபத்தில் வெளியிட்டார். 'தபாங் 3' ட்ரைலர் போல் 'ஹீரோ' படத்தின் டீசரும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தை பார்க்க சல்மான் கான் காட்டிய ஆர்வம் குறித்து தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் சமீபத்தில் பேசியபோது...

 

salman

 

 

"நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலான வரவேற்பு 'ஹீரோ' படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் சாரிடம் காட்ட வேண்டும் என்று தான் நினைத்தோம். டீசரைப் பார்த்து ரசித்த சல்மான் கான் சார், தானாகவே முன் வந்து இதை நானே வெளியிடுகிறேனே என்றதுடன் டீஸரில் பங்கு பெற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார். சல்மான் சார் தமிழ்த் திரையுலகம் குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஹீரோ படம் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், தான் அதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்