Skip to main content

சல்மான்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு; மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் அதிரடி

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Salman Khan gets Y+ security after threats from Lawrence Bishnoi gang

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா சில மாதங்களுக்கு முன்பு கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னாய் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகிய இருவருக்கும் பாடகர் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதமும் கூட லாரன்ஸ் பிஷ்னாயிடம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 
 

ad

 

ஏனென்றால் சல்மான் கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வகை மான்களை பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாகக் கருதுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ் பிஷ்னாய் இந்த மானைக் கொன்றதற்காக சல்மான்கானை கொன்று விடுவோம் எனக் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த மிரட்டல் கடிதம் வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து பாதுகாப்பு வேண்டும் என விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது வரை சல்மானுக்கு மும்பை காவல்துறையின் வழக்கமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 
 

இந்நிலையில் சல்மான்கானுக்கு தற்போது மும்பை காவல் துறையினரால் Y+ பிரிவு பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பில் இருந்த சல்மான்கானுக்கு தற்போதைய நிலவரத்தைப் பற்றி சோதித்த அதிகாரிகள், இப்போதும் அச்சுறுத்தல் அதிகம் நிலவி வருவதால் அவருக்கு இரண்டு மடங்கு கூடுதல் பாதுகாப்பாக Y+ பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Y+ பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 2 முதல் 4 வீரர்கள் உள்ளிட்ட 11 காவல்துறையினர் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதே போல் நடிகர்கள் அக்சய் குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கு X பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதுகாப்புப் பணிகளின் செலவுகளை அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக்சய் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தேசியம் குறித்துப் பேசியதாகவும் அனுபம் கெர் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியானது தொடர்பாகவும் இருவருக்கும் அச்சுறுத்தல்கள் வந்ததாகப் பேசப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

அக்‌ஷய் குமார் - டைகர் ஷெராஃப்பின் 'படே மியன் சோட்டே மியன்' 

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Akshay, Tiger, Prithviraj starring Bade Miyan Chote Miyan upd

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'படே மியன் சோட்டே மியன்'. இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்கா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.

இப்படம் குறித்து அக்ஷய் குமார் கூறுகையில், "ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டைக் காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்." என்றார்.