vdsgsd

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார். இதற்கிடையே தன் பெயரில் கட்சி கட்சி ஆரம்பித்தால் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் என கருதிய விஜய், தேர்தல் ஆணையத்திற்கும் மறுப்பு கடிதம் அனுப்பினார்.

Advertisment

இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் விஜய் பெயர் இடம்பெற்றிருந்ததால் கட்சிப் பெயரைபதிவுசெய்ய அனுமதி மறுத்துவிட்டது. வேண்டுமானால் மாற்றுப் பெயரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது.

Advertisment

இந்நிலையில் 'அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி' என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் புதிய கட்சி சார்பாக அவர் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.