இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து முனனணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ராம் சரணை கோலிவுட் ரசிகரகளிடம் பிரபலமாக்கியது.
இதையடுத்து மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்தது.
ராம் சரண் இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படமும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் சிம்புவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இரண்டு நபர்களைக் கைது செய்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், 'ஜரகண்டி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இன்று ராம் சரணின் பிரந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகப் படக்குழு இப்பாடலை வெளியிட்டுள்ளது. மேலும் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. இப்பாடல், ஷங்கர் படத்தில் வழக்கம் போல் இடம்பெறும் காதல் குத்து பாடலாக அமைந்துள்ளது. மேலும் பிரம்மாண்டமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் இடையில் காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை தலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் ஆகியோர் பாடியுள்ளனர். முதலில் தெலுங்கு பதிப்பு வெளியானதை அடுத்து தற்போது தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. அடுத்ததாக இந்தி பதிப்பும் வெளியாகவுள்ளது.
தமிழ் பதிப்பிற்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்து அதிக வரிகள் இடம் பெற்றுள்ளன. ‘வெள்ளை தங்கம் கே.ஜி.எஃப் ஓனர் நான்டி..., சிஸ்டம் சறுக்குனா மொறப்பான்டி, தண்டர் ஸ்டார்ம போல் டிண்டர் சீமையில் சொழண்டது வேற யாருடி...’ போன்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.