Skip to main content

95வது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் வெளியீடு; தென்னிந்தியத் திரையுலகில் 'ஆர்.ஆர்.ஆர்' சாதனை

 

rrr in 95 oscar nomination list

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படம் படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் போட்டிக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஆஸ்கர் அமைப்பு. அந்த வகையில் சிறந்த பாடல் (Original Song) பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. 

 

தென்னிந்திய மொழிப் படங்கள் இந்தியா சார்பாக பலமுறை அனுப்பப்பட்டும் எந்த படங்களும் நாமினேஷன் ஆகாத நிலையில், முதல் முறையாக தென்னிந்தியப் படம் ஒன்று நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதுவும் தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டு நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்