Skip to main content

‘காலம் ஒரு துரோகி’ ராக்கி ட்ரைலர் வெளியானது...

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

தரமணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வசந்த் ரவி. இவர் தற்போது நடித்திருக்கும் படம் ராக்கி. இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். 
 

vasanth ravi

 

 

ஜில் ஜங் ஜக், அவள் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. காலம் ஒரு துரோகி... என வாய்ஸ் ஓவரில் தொடங்கும் ட்ரைலர் பல இண்டென்ஸான காட்சிகளுடன் இருக்கிறது. வெளியான உடனேயே சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.
 

ad


இப்படத்தின் ட்ரைலர் பலரை கவர்ந்துள்ள நிலையில் இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலருடன் படம் பார்த்த நயன்தாரா... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

nayanthara vignesh shivan watched rockey movie theatre

 

'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரது பாராட்டுக்களைப் பெற்ற நடிகர் வசந்த் ரவி, தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'ராக்கி' படத்தில் நடித்துள்ளார். 'ராக்கி' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார். இப்படத்தை ஆர்.ஏ.ஸ்டூடியோஸ் சி.ஆர். மனோஜ் குமார் தயாரித்திருந்த நிலையில், தற்போது ‘ராக்கி’ படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகை நயன்தாரா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

 

ad

 

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ராக்கி படத்தை எஸ்கேப் சினிமாஸில்  பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

 

Next Story

"காலம் ஒரு துரோகி"... கவனம் ஈர்க்கும் 'ராக்கி' பட ப்ரோமோ!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Rocky Promo Video goes viral

 

'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரது பாராட்டுக்களைப் பெற்ற நடிகர் வசந்த் ரவி, தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'ராக்கி' படத்தில் நடித்துள்ளார். 'ராக்கி' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார். இப்படத்தை ஆர்.ஏ.ஸ்டூடியோஸ் சி.ஆர். மனோஜ் குமார் தயாரித்திருந்த நிலையில், தற்போது ‘ராக்கி’ படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகை நயன்தாரா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில், படத்தின் ப்ரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நயன்தாரா கையில் சுத்தியலுடன், “காலம் ஒரு துரோகி” என்ற வசனத்தோடு மிரட்டியுள்ளார். ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ப்ரோமோ வீடியோ, தற்போது யூடியூப் தளத்தில் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.