Skip to main content

ரெட் ஜெயின்ட் நிறுவனத்தால் அழுத்தம் தரப்படுகிறதா? - ஆர் கே சுரேஷ் சொன்ன பதில் 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

rk suresh talk about udhayanidhi stalin red giant

 

சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளரும், நடிகருமான ஆர். கே சுரேஷ் வாங்கியுள்ளார்.இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  

 

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பல கேள்விக்கு பதிலளித்தனர். இதில் ஆர்.கே சுரேஷிடம் நிருபர் ஒருவர், சமீபகாலமாக தமிழ் படங்கள் எல்லாவற்றையும் உதயநிதியின்  ரெட் ஜெயின்ட்  நிறுவனம் மட்டும் தான் வெளியிடுறாங்க. ஆனால் இப்போது முதல் முறையாக நீங்கள் மட்டும் தான் தமிழ் படத்தை வெளியிடுகிறீர்கள், இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை அல்லது அழுத்தங்கள் ஏதும் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "சினிமா வேறு, அரசியல் வேறு, சினிமாக்குள்ள அரசியலை கொண்டுவர வேண்டாம். இந்த இந்த படத்தையும் சிட்டியில் உதயநிதியின்  ரெட் ஜெயின்ட்  தான் வெளியிடுகிறது. இந்நிறுவனம்  விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் முறையில் வருமானத்தை கொடுக்கின்றனர். அதனால்  ரெட் ஜெயின்ட்   நிறுவனத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது" என்றார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

தென்சென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) தென் சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்