/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/205_6.jpg)
ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடன இயக்குநர் பிருந்தா, அடுத்ததாக தக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஹிருது ஹரூன், பாபி சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கும் நிலையில், கதாபாத்திர அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “தயாரிப்பாளர் சிபு எல்லாவற்றிலும் அதிகமாக உழைப்பை போடக்கூடியவர். படத்தின் ஹீரோ ஹிருது, முதல்நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராகவே மாறிவந்தார். அவருடைய அர்ப்பணிப்பு அவருக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இயக்குநர் பிருந்தா கடின உழைப்பாளி. அவரது வேகம் எல்லோரையும் ஊக்கப்படுத்தும். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். படத்தில் ஒரு சண்டைக்காட்சியை மழையில் படமாக்கியிருக்கிறோம். அது ஹாலிவுட் பாணியில் சிறப்பாக வந்துள்ளது. என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)