Skip to main content

மறைந்த ரிஷி கபூருக்கு ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் இரங்கல்...

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

kamalhassan

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 


இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரது மறைவு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில், "என்னால் நம்ப முடியவில்லை. சிண்டு ஜி எப்போதும் சிரிப்புடன் தயாராக இருப்பவர். எங்கள் இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் உண்டு. என்னுடைய நண்பனை மிஸ் செய்வேன். அவருடைய குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“உடையாத உடல்; சரியாத மனம்” - கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 vairamuthu congratulates Kamal Haasan

 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் வல்லவர் நடிகர் கமல்ஹாசன். திரைத்துறையையும் தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கி அரசியல் செயல்பாடுகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அவரது எக்ஸ் பக்கத்தில் "நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன். இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது. வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்?  உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும். வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்