Skip to main content

ரியோ, பவித்ரா இணைந்து நடித்த ஆல்பம் பாடல் வெளியீடு!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

kannama ennama

 

இளம் திறமையாளர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக Noise and Grains, இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கிவருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ ஜே.பி இயக்க, எஸ். மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில் சின்னத்திரைப்பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நடன இயக்குநர் சாண்டி இப்பாடலை வெளியிட்டார்.

 

விழாவில் நடிகர் ரியோ பேசுகையில், "என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains மிக அழகாக வெளியிட்டுவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம்தான்; இன்னும் நிறைய செய்வார்கள்.அனைவரும் பாடலை பார்த்து ரசியுங்கள்" எனக் கூறினார்.

 

ad

 

இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், "ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்னபோது அவன் வேண்டாம் என்றான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு அது பிடித்து போய் உதவி செய்ய,  இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் எஸ். மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார். 

 

ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள இப்பாடல், யூடியூப் தளத்தில் நான்கு லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசையமைப்பாளர் தேர்வு என் விருப்பம் தான் - ‘ஜோ’ பட அனுபவம் பகிரும் ரியோ ராஜ்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Joe Movie Actor Rio Raj Interview

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர், பிறகு வெள்ளித்திரையில் நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ், சமீபத்தில் வெளியான ஜோ படத்தின் அனுபவம் பற்றி நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோ படக்குழு சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஒரே நேரத்தில் வந்தவர்கள். அந்த விதத்தில் அனைவரும் இணைந்து ஒரு வெற்றிப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரை நோக்கி வந்த போது எல்லோருக்கும் இருப்பது போல பல கஷ்டங்கள், சிக்கல்கள் அதெல்லாம் ஒரு வெற்றியைப் பார்த்த பிறகு சரியாகிடும். 

என் பார்ட்னர் கூட முதல் நாள் முதல் காட்சியின் போது என்னை திரையில் பார்த்ததும் ரொம்ப எமோஷனல் ஆனாங்க, அது படம் பார்த்து வந்த அழுகை இல்லை. அதற்கு பின்னால் இருந்த என்னுடைய ஒரு நீண்ட போராட்டம் இருக்கு, அதை நினைத்து அழுதாங்க, அந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போனால் ரிலாக்ஸா உணர வைக்கிற ஒரு இடமாக வீடு எல்லாருக்கும் அமைய வேண்டும். எனக்கு அப்படி ஒரு பார்ட்னர் அமைந்திருப்பது பாக்கியம் தான்.   

ஜோ படத்தின் கதை கேட்டு முடித்ததுமே சித்துகுமார் தான் இசையமைப்பாளராக இந்த படத்திற்கு இருக்க வேண்டும் என்பது நான் கேட்டுக்கொண்டது. குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே சித்துகுமாரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்தோடு மிகவும் திறமையானவருக்கு ஜோ படத்தின் மூலம் இந்த வெற்றி கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.  

Next Story

“ஜோ பட பாடல் இவர் எழுதப்போறாருன்னு சொன்னதும் நம்பவில்லை” - இசையமைப்பாளர் சித்துகுமார்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Joe Movie Music Director Siddhu Kumar Interview

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இசையமைப்பாளர் சித்து குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்கள் பின்வருமாறு..

ஜோ படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை முடிந்து பைனல் அவுட்புட் எடுக்கும் போது இரு ஒரு கம்போசராக எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப திருப்தியாக இருந்தது. திரையரங்கில் என்ன ரிசல்ட் வரும் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. பெரும் வெற்றியைக் கண்ட பிறகு இன்னும் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனதினை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். 

ராஞ்சனா, ரப்னே பனா ஜோடி போன்ற பாலிவுட் படங்களின் இசைக்கோர்வை எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும், அது நான் இசையமைக்கும் போது இன்ஸ்பிரேசனாகவும், ரொமாண்டிக் மூட் செட்டுக்கும் பயன்படும். சர்வதேச இசையமைப்பாளர்களின் இசை அதிகம் கேட்பேன், உறவுகள் தொடர்கதை பாடலை அடிக்கடி கேட்பேன், அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகவும் எப்போதுமே இருக்கிறது.

ஜோ படத்திற்கு இசையமைக்கும் போது படத்திற்கு அப்பாற்பட்டு போய்விடக்கூடாது, அது படத்துடனேயே பயணிக்க விரும்பியே வேலையை ஆரம்பித்தேன். உருகி பாடல் தான் முதலாவதாக ஆரம்பமானது அதற்கடுத்த பாடலுக்கான வரிகள் கூட நாயகன் ரியோ தான் எடுத்துக் கொடுத்தாரு, அவர் பாடல் எழுதப்போறேன்னு சொன்னதும் நம்பவில்லை, அப்புறம் அதை தவிர்க்கும்படியாக இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது.