Skip to main content

சசிகலா பற்றிய  படத்தில் 'ஈ' யார்? -சர்ச்சையை கிளப்பும் இயக்குனர்!

rgv

 

 

சர்ச்சையான படங்களையும், சர்ச்சையான கருத்துகளையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருபவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா. இந்த கரோனா ஊரடங்கில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்த ராம் கோபால் வர்மா, சமீபத்தில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை பற்றி படம் எடுக்கப்போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார். இந்தநிலையில், சசிகலாவை பற்றி அதே பெயரில் படமெடுக்கப்போவதாக கூறி, தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்திருக்கும் போஸ்டர்களை வெளியிட்டுள்ள அவர், "ஜெயலலிதாவிற்கு ஒரு முகம், சசிகலாவிற்கு இரண்டு முகம், ஈ -க்கு மூன்று முகம் உள்ளது. உண்மைக்கு பின்னால் இருக்கும் உண்மைகள் பிப்ரவரியில் வெளியிடப்படும்" எனக் கூறியுள்ளார். மேலும் தலைவி படம் வெளியாகும் அன்றே, தான் எடுக்கும் சசிகலா படமும்  வெளியாகும் எனவும், அதற்கு, தலைவி படத்தில் சசிகலா இல்லையென்பதும், தான் ஈ என்ற நபரோடு சேர்த்து முழுக்கதையையும் காட்ட விரும்புவதே காரணம் என குறிப்பிட்டுள்ளார். 

 

ராம் கோபால் வர்மா மேலும், "ஜெ, எஸ், டி,ஐ,ஈ ஆகிய நபர்கள், சசிகலா படத்தின் கூடுதல் மற்றும் முக்கிய பத்திரமாக இருப்பார்கள். படத்தின் ட்ரைலர், டிசம்பர்  முதல் வாரத்தில் வெளியிடப்படும். 'ஈ' என்ற உண்மை சசிகலாவின் பின்னால் மறைந்திருக்கிறது" எனவும் கூறியுள்ளார்.

 

ராம் கோபால் வர்மாவின் இந்த அறிவிப்பு, மீண்டும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது.