Skip to main content

''தல படத்தை நம்புனேன்...தகுதி இல்லனு சொல்லிட்டாங்க'' - தயாரிப்பாளர் ரவிந்திரன் ஆதங்கம் 

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் தயாரிப்பாளரும், 'கூர்கா' படத்தின் விநியேகஸ்தருமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிந்திரன் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படம் குறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசும்போது....

 

Ravindran

 

''விநியேகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்தில் அஜித் நடித்திருக்கும் நேர அளவு குறித்தும், படத்தின் கண்டன்ட் குறித்தும், வணிகரீதியான பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை இப்படம் குறித்து எங்கு விசாரிக்க வேண்டுமோ அங்கு விசாரித்ததில் படம் அல்டிமேட்டாக உள்ளது. இது படத்தின் உண்மையான, மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து எனக்கு கிடைத்த தகவல். இப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்று எனக்கு நம்பிக்கை இருந்ததால் விநியேக உரிமைக்கு தொடர்புகொண்டேன். யாருக்கும் இல்லாமல் எனக்கு மட்டும் படத்தை விநியேகம் செய்ய பல்வேறு கண்டிஷன்கள் போட்டாரகள். 

 

 

குறித்த நேரத்தில் அட்வான்ஸ் கொடுக்கவேண்டும், ஒப்பந்தம் போடாமல் வெறும் லெட்டர் ஹெட்டில் தான் தருவோம் எனவும், என்னுடைய லோகோவை பயன்படுத்த கட்டுப்பாடு, அதிக விலை என பல்வேறு கட்டுப்பாடுகளை நான் சந்தித்தேன். இத்தனைக்கும் படத்தை நான் அதிக விலைக்கு கேட்டும் பார்த்தேன். அது நடக்கவில்லை. இது ஏன் எனக்கு மட்டும் என பார்த்தால் அஜித் படம் பண்ண எனக்கு என்ன தகுதி இருக்கிறது என பார்க்கிறார்கள். இது என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. என்னுடைய கம்பெனி சின்ன படங்கள் மட்டும் விநியேகம் செய்யாது என நிரூபிக்கவே முயற்சி செய்தேன். எனக்கென்று சில ஆக்கபூர்வமான ஐடியாக்கள் இருந்தது. அதன்படி இப்படம் கிடைத்திருந்தால் கொண்டாடி இருப்பேன். தல படம் என்னை கைவிடாது என நம்பிக்கையோடு இருந்தேன். இருந்தாலும் இப்படம் யாரிடம் சென்றாலும் சரி, படம் நன்றாக வந்துள்ளது. இது மாபெரும் வெற்றிபெறுவது உறுதி" என்றார்.  

 

சார்ந்த செய்திகள்