Skip to main content

புலி முருகன் டீமில் இணையும் ராட்சசன் பட வில்லன்

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
ratchasan villan movie

 

 

 

மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படத்தில் வசனம் எழுதிய  ஆர்.பி.பாலா 'அகோரி' என்கிற படத்தை எடுத்த கையோடு அடுத்ததாக 'அனுநாகி ' என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். 'அனுநாகி' தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்.  இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம்  என்றாலும் இதில் நட்பு ,காதல், அன்பு, காமெடி, பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் வகையில் படமாக்கவுள்ளனர். ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள். மைம்கோபி,ரியாஸ்கான், 'காலா' படப்புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். 'ராட்சசன் 'பட வில்லன் சரவணன், 'ராஜா ரங்குஸ்கி' விஜயசத்யா, ஆதவ், 'தொடரி 'ராஜகோபால், ரியமிகா, சம்யுக்தா, ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து 'அனுநாகி' படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆர். பி.பாலா எழுத, அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். டி படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ராட்சசன் இன்பராஜ் ஆசிரியரை விட இவர்கள் மோசமானவர்கள்" - இயக்குனர் காட்டம்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
gegesghseg

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்தனர். இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

 

ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தில், வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ் எனும் கதாபாத்திரத்தை ராஜகோபாலன் விவகாரத்தோடு ஒப்பிட்டு பலரும் சமூகவலைத்தளத்தில் பேசிவந்த நிலையில், இது குறித்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
 

 

Next Story

'ராட்சசன் படம் பார்த்துவிட்டு, மிகவும் பிடித்துப்போய், இதோ இந்த நேர்காணல் நடந்துகொண்டிருக்கும் இதே இடத்திற்கு வந்தார் என் மனைவி ரஜினி’

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

‘நானும் என் மனைவியும் கடந்த ஒன்றரை வருடங்களாக பிரிந்துதான் இருக்கிறோம். ஆனால் ராட்சசன் படம் பார்த்துவிட்டு, மிகவும் பிடித்துப்போய், இதோ இந்த நேர்காணல் நடந்துகொண்டிருக்கும் இதே இடத்திற்கு வந்தார் என் மனைவி ரஜினி’

நடிகர் விஷ்ணு விஷால் நமது நேர்காணலில் தெரிவித்த எமோஷனலான விஷயம் இது. சிலுக்குவார்பட்டி சிங்கம், விஷால், விஜய் சேதுபதி என பல விஷயங்களை விஷ்ணு விஷால் பகிர்ந்துகொண்ட அந்த நேர்காணலை முழுமையாக இங்கே பார்க்கலாம்.