Vijay Deverakonda

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் 'கீதா கோவிந்தம்'. இப்படத்தில், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவிற்கு இடையேயான காதல் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து,‘டியர் காம்ரேட்’ படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், இப்படத்திலும் இருவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இந்த ஜோடி தற்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இப்படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணையும் படத்தை சுகுமார் இயக்கவுள்ளார்.