Skip to main content

ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு...வருமான வரிச்சோதனை விவகாரம்!

Published on 18/01/2020 | Edited on 20/01/2020

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்திருந்தார். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே இன்கெம் காவாலே என்னும் பாடல் வைரலானது. அதில் நடித்திருந்த ராஷ்மிகாவுக்கும் ரசிகர்கள் தென்னிந்தியா முழுவதும் உருவானார்கள். கீதா கோவிந்தம் படம் தமிழ் மொழியில் டப் செய்து வெளியாகவில்லை என்றாலும் தெலுங்கிலேயே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதன்பின் இவ்விருவரும் சேர்ந்து டியர் காம்ரேட் என்னும் படத்தில் நடித்தனர். இது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து வெளியிடப்பட்டது. இவர் தமிழில் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து சுல்தான் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
 

rashmika mandana

 

 

கடந்த 2016ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தென்னிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுடன் இவர் ஜோடி சேர்ந்த சரிலேரு நீக்கெவரு கடந்த 11ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்திற்கான புரோமோஷன்களில்  ‘நீங்கள் அதிக பணம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டீர்களாமே’ என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கெல்லாம் பதிலளித்த ராஷ்மிகா,  ‘சினிமாவிற்கு நான் கத்துக்குட்டி, அப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நான் இன்னும் நீடித்து உழைக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ராஷ்மிகாவின் மீது சந்தேகமடைந்த வருமான வரித்துறை கர்நாடகா குடகு மாவட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் திடீர் சோதனை நடத்தியது. கடந்த 16ஆம் தேதி காலை 7:30 மணிக்கு மூன்று வாடகை காரை எடுத்துக்கொண்டு, 10 பேர் அடங்கிய ஐடி குழு ராஷ்மிகா வீட்டிற்கு சென்று 10 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் வீட்டில் ராஷ்மிகா இல்லாததால் அவருடைய தந்தையிடம் கணக்கு ஆவணங்கள் குறித்த விசாரணைகளை அடுத்தநாள் வரையில் நடத்தியுள்ளனர். ராஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் பெட்ரோல் பங்குகளிலும் இந்த சோதனையாந்து நடபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா தனது சொந்த ஊரில் சர்வதேச பள்ளி ஒன்றையும், பெட்ரோல் பங்கையும் தொடங்க விண்ணப்பித்திருக்கிறார் என்றும் இதனால்தான் சந்தேகமடைந்த வருமான வரி சோதனையினர் ராஷ்மிகா வீட்டில் திடீரென சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வருமான வரிச்சோதனை நடைபெறும்போது ராஷ்மிகா ஷூட்டிங்கிற்காக சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது. வருகிற திங்கள் கிழமை பெங்களூருவிலுள்ள வருமான வரித்துறையினர் அலுவலகத்திற்கு ராஷ்மிகா தனது தந்தையுடன் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராஷ்மிகா வீட்டிலிருந்து கணக்கு காட்டப்படாத 25லட்சம் பணத்தை வருமான வரிச் சோதனையில் அதிகாரிகள் மீட்டிருப்பதாக பரவும் தகவலை ராஷ்மிகா சட்டப்படி அணுகயிருப்பதாக கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.