Skip to main content

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷின் ‘குபேரா’ - ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Rashmika Mandana Video Launch at Dhanush's 'Kubera' movie

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் ராஷ்மிகா மந்தனா ஆர்வத்துடன் வந்து கடப்பாறையைக் கொண்டு கீழே தோண்டுகிறார். சீறிக் கொண்டு தோண்டியதில், சூட்கேஸ் ஒன்றை எடுக்கிறார். அந்த சூட்கேஸ் முழுக்க பணம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ராஷ்மிகா, அதைத் தொட்டு கும்பிடுகிறார். மீண்டும் அந்த சூட்கேஸை மூடிவிட்டு, அதை எடுத்துக் கொண்டு நகர்கிறார் என்பதோடு முடிகிறது.  

Next Story

பிரபல பாடகியின் பயோ- பிக்; பரிசீலனையில் டாப் நடிகைகள்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
trisha, nayanthara, rashmika are talks in ms subbulakshmi biopic

கர்நாடக சங்கீதத்தில் கோலோச்சியவர் பிரபல பின்னணிப் பாடகி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இசை ரசிகர்களால் எம்.எஸ் சுப்புலட்சுமி என அறியப்படும் இவர், சிறுவயதிலேயே கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவைகளை கற்றுக் கொண்டார். பின்பு தனது தாயின் கச்சேரியில் பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து அவரது அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னையில் கச்சேரி நடத்திய எம்.எஸ் சுப்புலட்சுமி திரைப்படங்களில் நடிகையாகவும் அறிமுகமானார். சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு, விலகிய அவர், இந்திய கலாச்சார தூதராக, லண்டன், நியூயார்க், கனடா என உலகம் முழுவதும் இசை கச்சேரிகள் நடத்தினார்.   

இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பாரத் ரத்னா விருது வாங்கிய முதல் பாடகர் என்ற பெருமையை எம்.எஸ் சுப்புலட்சுமி பெற்றார். மேலும் பத்ப பூஷன், பத்ம விபூஷன், இந்திரா காந்தி விருது என பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 2004 டிசம்பர் 11 அன்று மறைந்தார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

trisha, nayanthara, rashmika are talks in ms subbulakshmi biopic

2025 இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் த்ரிஷா, நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய நடிகைகளில் யாராவது ஒருவர் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.