rammu

Advertisment

பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 50-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

தன்னுடைய 14வது வயதில் வெள்ளை மனசு என்னும் தமிழ் படத்தில் மூலம் ஆறிமுகமானார். பரதநாட்டியம் பயின்ற ரம்யா கிருஷ்ணனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து உட்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். பாகுபலியில் இவருடைய சிவகாமி கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமானது. ரம்யா கிருஷ்ணன் தனது 50 வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் பலர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Advertisment

ரம்யா கிருஷ்ணன் தனது 50 வது பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்து ஒரு படத்தைசமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார். அதில்தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.