Skip to main content

பிரபல நகைச்சுவை நடிகரை இயக்கும் ராம் - புது காம்பினேஷனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

 

ram next movie update mirchi shiva playing lead role

 

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படமான 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை 'வி ஹவுஸ் ப்ரொடக்சஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் ராம் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க பிரபல ஓடிடி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் அல்லது மத்தியில் தொடங்கவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பொதுவாக ராம் படங்களில் ஹீரோ கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரமாகவே இருக்கும். ஆனால் தற்போது நடிக்கவுள்ள மிர்ச்சி சிவா தொடர்ந்து நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள்ளார். இதனால் இருவரின் காம்பினேஷனில் உருவாகும் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

 

 

மிஸ் பண்ணிடாதீங்க