/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/173_15.jpg)
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றைபடமாக எடுத்தால் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் ராம் சரணும் ஆர்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கவுள்ளதாகவும், அதில்ராம் சரண் நடிக்கவுள்ளதாகவும் தகவல் உலா வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த தகவலை ராம் சரண் தரப்பு மறுத்துள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு விராட் கோலியின் பயோ பிக்கில் இப்போதைக்கு நடிக்க எந்த பிளானும் இல்லையாம். மேலும் அவர் ஒப்புக்கொண்டுள்ள படத்தை அடுத்தடுத்து முடிப்பதே இப்போதைய திட்டமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)