Skip to main content

தோனியை சந்தித்த ராம் சரண் - புகைப்படம் வைரல்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

ram charan meets dhoni

 

ராம்சரண், தற்போது ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்குச் சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்தார்.  

 

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் 'இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி' என்றும் பதிவிட்டிருந்தார். 

 

ராம்சரணின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் 'கேம் சேஞ்சர்' எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில், ராம் சரணும் எம்.எஸ். தோனியும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனைச் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரபல நடிகர்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Ram charan debuting as a producer!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. 

முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராம் சரண், தற்போது தயாரிப்பாளராகவும் கால் பதிக்கவுள்ளார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, கார்த்திகேயா ஆகிய 2 வெற்றி படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனத்தின் விக்ரம் ரெட்டி ஆகியோருடன் இணைந்து நடிகர் ராம் சரண் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை தயாரிக்கிறார். ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா இன்று தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

Next Story

டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
chiranjeevi ram charan to attend indian 2 audio launch

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. 

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

chiranjeevi ram charan to attend indian 2 audio launch

இந்த நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக ரஜினி, ராம் சரண் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களோடு சிரஞ்சீவியும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.