Skip to main content

ரசிகர்களின் வரவேற்பில் ரஜினி - இணையத்தில் வைரல்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

rajini video in his 170th movie set

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

 

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

கேரளாவில் இருக்கும் ரஜினியை அங்கிருக்கும் ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று அவரது கார் வருவதை அறிந்த ரசிகர்கள் காரை சுற்றி இருந்தனர். ரஜினியை பார்த்ததும் ஆரவாரம் செய்தனர். உடனே காரின் மேற்கூரையில் வழியாக வெளிவந்த ரஜினி, ரசிகர்களுக்கு வணக்கம் வைத்து கையசைத்து மகிழ்ந்தார். அப்போது ரஜினியின் புது லுக் மற்றும் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்