rajini in ramar temple opening ceremony

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணலைக் கொண்டு கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் குடமுழுக்கு விழா இன்று மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி ராமர் சிலையைபிரதிஷ்டை செய்துநிறுவவுள்ளார். பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடக்கும் இந்த விழாவில் அழைப்பு விடுக்கப்பட்ட திரைப் பிரபலங்கள் அனைவரும் தற்போது கோவிலுக்குள் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப் ஆகியோர் வந்துள்ளனர்.