கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.
இந்த நிலையில் இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸாகவுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது மேலும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு ரீ ரிலீஸ் தொடர்பான வீடியோ ஒன்றைப் படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் 'எல்லோரும் ஃபிளாஷ்பேக் பற்றி பேசுகிறார்கள். இதோ ரஜினியின் ஃபிளாஷ்பேக்' எனக் குறிப்பிட்டு முத்து பட காட்சிகளைக் குறிப்பிட்டுள்ளனர். சமீபமாக ஃபிளாஷ்பேக் தொடர்பான பேச்சு ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் லியோ பட ரிலீஸுக்கு பின்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில், படத்தில் வரும் விஜய்யின் ஃபிளாஷ்பேக் பொய்யாக கூட இருக்கலாம் எனச் சொல்லியிருந்தார். அதன் பிறகு பலரும் ஃபிளாஷ்பேக்கில் வரும் படங்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தனர். அது ட்ரெண்டாகி வந்த நிலையில், அந்த ட்ரெண்டிற்கு ஏற்ப திடீரென்று சர்ப்ரைஸாக முத்து படக்குழுவும் ரீ ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"Vandhutenu sollu. Na thirumbi vandhutenu sollu 📷
Fan-fav Muthu is coming back this November. Stay tuned for updates on the re-release!"#kavithalayaa #kb #kbalachander #pushpakandaswamy #Muthurerelease #muthu #muthumovie #muthutamilmovie #Rajinikanth #superstar pic.twitter.com/7mqrV6vyhG— Kavithalayaa (@KavithalayaaOff) November 4, 2023