Skip to main content

கலைஞர் நினைவிடத் திறப்பு விழாவில் ரஜினி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
rajini at kalaignar memorial opening ceremony

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றிருக்கும் நிலையில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். முதல்வருக்கு அருகில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். மேலும் வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

சூப்பர் ஸ்டார்னா அடிமையா? - விமர்சனம் குறித்து பேரரசு கருத்து

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
perarasu about rajini ambani wedding dance controversey

எஸ். சுகன் இயக்கத்தில் ஜி.சிவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிதா’. இப்படம் இந்தியாவிலேயே 23 மணி 23 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட படமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதேஷ் பாலா, மாஸ்டர் தர்ஷித், சாம்ஸ், ஸ்ரீராம் சந்திரசேகர், அருள்மணி, அனு கிருஷ்ணா, ரெஹனா மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். ஜூலை 26ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர் பேரரசு மற்றும் மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

அந்நிகழ்ச்சியில் பேரரசு பேசுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் அவரும் மனிதர் தான். அவருக்குள்ளும் ஆதங்கம் இருக்கும், எங்கேயாவது ஒரு இடத்தில் சராசரி மனிதனாக வாழ அவர் ஆசைப்படலாம். அந்த வகையில் நடந்து முடிந்த அம்பானி வீட்டுக் கல்யாணத்தில் பங்கேற்று சராசரி மனிதனாக டான்ஸ் ஆடினார். அது ரஜினி எப்படி ஆடலாம் என பேசு பொருளானது. சூப்பர் ஸ்டாராக இருந்தால் உங்களுக்கு அவர் அடிமையா?. எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு எப்போதும் அவர் கையில் முத்திரை வைத்துக்கொண்டும் உட்கார்ந்து இருக்க வேண்டுமா?

சில  இடங்களில் அவரை சராசரி மனிதனாக  வாழ விடுங்கள். இதை எல்லாம் பெரிதாக விமர்சனம் பண்ணிக்கொண்டு உள்ளார்கள். இதை எல்லாம் அவர் பார்த்தால் கூனி குறுகிவிடுவார். என்னடா சின்னதா டான்ஸ் ஆடினோம் இதை பெரிய குற்றம்போல  விமர்சித்து வருகின்றனர் என நினைப்பார். கொலை, கள்ளச்சாராயம் என ஆயிரத்துத்தெட்டு பிரச்சனை உள்ளது நாட்டில், அதைப் பேசாமல் சின்னதா ஒரு மூமண்ட் ஆடினதைப் பேசுகின்றனர்” என்றார்.

Next Story

“பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்ற முன்வரவேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
We should come forward to change the name boards in Tn CM MK Stalin speech

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (23.07.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் டி. ஜகந்நாதன், நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவிலேயே முதன்முதலாக வணிகப் பெருமக்களின் நலனுக்காக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியவர் கலைஞர். கடந்த 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி (25.09.1989) கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நல வாரியம் இன்று வரைக்கும் சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது. முதலமைச்சரைத் தலைவராகவும், வணிகவரித்துறை அமைச்சரைத் துணைத்தலைவராகவும் கொண்டு இந்த நல வாரியம் அமைக்கப்பட்டது. கலைஞரால் இந்த வாரியம் உருவாக்கப்பட்ட போது அலுவல் சாரா உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள்.

We should come forward to change the name boards in Tn CM MK Stalin speech

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி இந்த எண்ணிக்கையை 30 பேர்களாக அரசு உயர்த்தியது. இந்த வாரியம் தொடங்கப்பட்டபோது வாரியத்தின் துவக்க நிதியாக 2 கோடி ரூபாயாக இருந்தது. அது 2012-ஆம் ஆண்டு 5 கோடியாகவும், 2017-ஆம் ஆண்டு 10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது 4 கோடியே 5 இலட்சம் ரூபாய் திரட்டு நிதி கையிருப்பு உள்ளது. தொடக்கத்தில் நடைபாதை வணிகர்கள் இல்லாமல் மற்றவர்கள் 500 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி உறுப்பினர் ஆகலாம் என இருந்தது. இந்த உறுப்பினர் கட்டணத்தில் சலுகை தர அரசு முடிவெடுத்ததை உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

திமுக ஆட்சி அமைந்ததும், 15.7.2021 முதல் 14.10.2021 வரை மூன்று மாத காலத்திற்குள் உறுப்பினர்களாகச் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லை என்று அறிவித்தோம். பல்வேறு வணிகர் சங்க பேரமைப்புகள் இந்தச் சேவையை மேலும் நீட்டிக்கச் சொன்னார்கள். அதை ஏற்று 31.3.2022 வரை நீட்டித்தோம். இந்த சேவையின் வாயிலாக 40 ஆயிரத்து 994 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

We should come forward to change the name boards in Tn CM MK Stalin speech

இதுவரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம், தமிழ்நாடு மதிப்பும் கூட்டு வரிச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்தபோது தமிழ்நாட்டின் அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதுபோன்ற செயல்கள் நாங்கள் சொல்லி, நீங்கள் செய்வதாக இல்லாமல், நீங்களே முன்வந்து செய்வதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காணமுடியவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது. அந்த அளவுக்கு பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது திமுக அரசின் கொள்கை” எனத் தெரிவித்தார்.