/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/401_55.jpg)
ரஜினிகாந்த், தனது 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடித்துமுடித்துள்ளார். வேட்டையன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே கேரளாவிற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அங்கு சென்றார். பின்பு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குபதிலளித்தார். அவர் பேசுகையில், “கூலி படத்தின் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. வேட்டையன் பட பணிகளும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” என்றார். இதனிடையே இந்தியன் 2 படம் குறித்த கேள்விக்கு, நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார்.
கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)