Skip to main content

ஆஸ்கர் ரேசில் மீண்டும் ஆர்.ஆர்.ஆர்

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

 rajamouli submitted his rrr movie at 95th oscar award

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். மேலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய சார்பாக போட்டியிட இந்திய தேர்வு குழுவிற்கு படக்குழு அனுப்பிவைத்தனர். ஆனால் இந்திய தேர்வு குழு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படத்தை தேர்வுசெய்தது. 

 

இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இடம்பெற செய்ய தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் படக்குழு. இப்படத்தை மொத்தம் பதினைந்து பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். 

 

சிறந்த திரைப்படம் - டி.வி.வி.தனய்யா

சிறந்த இயக்குநர் - ராஜமெளலி

சிறந்த நடிகர் - ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்

சிறந்த துணை நடிகர் - அஜய் தேவ்கன்

சிறந்த பாடல் -  நாட்டு நாட்டு

சிறந்த பின்னணி இசை - கீரவாணி

சிறந்த பட தொப்பாளர் - ஸ்ரீகர் பிரசாத்

சிறந்த ஒலி அமைப்பு - ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே

சிறந்த திரைக்கதை - விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்

சிறந்த துணை நடிகை - ஆலியா பட்

சிறந்த ஒளிப்பதிவு - செந்தில் குமார்

சிறந்த தயாரிப்பு - சபு சிரில்

சிறந்த ஆடை அமைப்பாளர் - ராம ராஜமெளலி

சிறந்த  சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணையாளர் - நல்ல ஸ்ரீனு, சேனாபதி

சிறந்த காட்சி அமைப்பு - ஸ்ரீனிவாஸ் மோகன்

ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  
     

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.