zsfzsvzs

Advertisment

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன், தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் ‘ருத்ரன்’படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்,பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ‘ருத்ரன்’படப்பிடிப்பு இன்று (21.01.2021) பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.