ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் வளர்ச்சியடைந்த பின்னர் அந்தாலஜி திரைப்படங்களில் வருகை அதிகரித்துள்ளது. அந்தாலஜி என்றால் ஒரு திரைப்படத்தில் நான்கு கதைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கதைகளைஉள்ளடக்கியது. அந்த ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரு முழு நீள படமாக வெளியிடுவது அந்தாலஜி ஆகும்.
தமிழ் திரையுலகிலும் அந்தாலஜி படங்கள் அவ்வப்போது வருகிறது. அதில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் சில்லுக்கருப்பட்டி ஆனால், இந்த படத்தை ஒரே இயக்குனர்தான் இயக்கினார்.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு ஐந்து பிரபலங்கள் ஐந்து வெவ்வேறு விதமாக கதைகளை உள்ளடக்கி படமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. புத்தம் புது காலை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சுதா கொங்காரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் இயக்குகின்றனர்.
Delighted to launch the trailer of #PuthamPudhuKaalai. Congratulations to the team on their new beginnings! https://t.co/lPNgj2JNmU@PrimeVideoIN@menongautham#SudhaKongara@DirRajivMenon@hasinimani@karthiksubbaraj@shal_shankarpic.twitter.com/JFctAQM1Wn
— A.R.Rahman (@arrahman) October 5, 2020
அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்படும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். காளிதாஸ் ஜெயராம், ஜெயராம், ஆண்ட்ரியா, ஸ்ருதி ஹாசன், அனு ஹாசன், சுஹாசினி, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.