producer suresh kamatchi talk about maanaadu film

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று 75 வது நாளை கடந்த திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படத்தின் விநியோகஸ்தர்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'மாநாடு' திரைப்படம் வெளியாகி 75 நாள் ஆகியும், விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றி படத்திற்கே இந்த நிலைன்னா... மற்ற படங்களின் நிலையைஎன்ன சொல்ல?? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய? நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுலஎன்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க"எனக் குறிப்பிட்டுள்ளார்.