/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/396_1.jpg)
கடந்த 3 ஆண்டுகளுக்கும்மேலாக மன்னர் வகையறா படம் தொடர்பாக விமலுக்கு, தயாரிப்பாளர்சிங்காரவேலனுக்கும்இடையே பிரச்சினை இருந்து வருகிறது. சிங்காரவேலன் தனது பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விமல் விருகம்பாக்கம்காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு இந்த புகாரின் அடிப்படையில் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் நடிகர் விமல், 'விலங்கு' படத்தின்தயாரிப்பாளரைசிங்காரவேலன் மிரட்டி பணம் பறித்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது மன்னர் வகையறா படம் தொடர்பான பிர்ச்சனையிலும்சிங்காரவேலன்கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நிலுவையில் உள்ள முதல் வழக்கையும், தற்போது பதிவாகியுள்ள இரண்டாவது வழக்கையும் சேர்த்து சிங்காரவேலனிடம்விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)