rajnikanth

Advertisment

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் அண்ணாத்த. கரோனா காலகட்டத்திற்கு முன்பாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலால் தற்போது எட்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால் பலரும் பல விதமாக ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். அண்மையில்கூட அப்படி ஒரு கடிதம் சமூகவலைதளத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்த, ரஜினி விளக்கமளித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தற்போதும் அப்படி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ரஜினியின் பி.ஆர்.ஓ-வான ரியாஸ் அகமத் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. ரஜினி நலமுடன் இருக்கிறார். யாரோ விஷமிகள் இவ்வாறு வதந்தியை கிளப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.