யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐ.நா பொது சபையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "இன்றைய உலகில் ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் சந்திக்கிறோம். உலகளாவிய ஒற்றுமை முன்பைவிட தற்போது மிக முக்கியமானது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் பல நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக வாழ்க்கையில் ஏற்படும் சூழல் மாற்றம், வறுமை, பசி, பட்டினி, சமத்துவமின்மை உள்ளிட்டவை சமூகத்தின் அடித்தளத்தை அளிக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு எதிராக உலக நாடுகள் நீண்ட நாட்களாக போராடி வருகிறது.
உலகம் முழுவதும் இந்த பிரச்சனைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் சந்தர்ப்பங்களால் உருவானவையல்ல. ஆனால் இந்த நெருக்கடியில் இருந்து மீள சரியான திட்டத்துடன் செயல் பட வேண்டும். அதற்கான செயல் திட்டம் எங்களிடம் உள்ளது. உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை மிக முக்கியம்" என பேசினார். இதனிடையே பிரியங்கா சோப்ரா, உலக அமைதிக்காக போராடி நோபல் பரிசு வென்ற மலாலா உள்ளிட்ட சில பிரபலங்களைச் சந்தித்தார்.