Skip to main content

சத்தான்குளம் சம்பவத்திற்கு ப்ரியங்கா சோப்ரா கண்டனம்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

priyanka

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ''நான் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. எந்தவொரு மனிதருக்கும் இந்தக் கொடுமை நிகழக்கூடாது, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி.

 

இதற்குக் காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். அந்தக் குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஆடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தினார்" - பிரியங்கா சோப்ரா பகீர் குற்றச்சாட்டு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

priyanka chopra accusses bollywood film director

 

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 

 

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் நடக்கும் அனுபவங்கள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பேசி வருகிறார். அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்களையும் பகிர்ந்திருந்தார். அண்மையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக பாலிவுட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 

 

இதனை ஒரு ஆங்கில ஊடகத்தில் சொன்ன அவர், இது பற்றி விரிவாகக் கூறுகையில், "2002-2003 ஆம் ஆண்டுகளில் ரகசிய ஏஜெண்ட்டாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஒரு ஆணை வசியம் செய்ய வேண்டும். அதில் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளுடன் அந்த நபரை மயக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். அதனால் ஸ்கின் ட்ரெஸ் (Skin dress) அணிந்து கொண்டு நடிப்பதாகச் சொன்னேன். ஆனால், அந்த இயக்குநர் ஸ்கின் ட்ரெஸ் இல்லாமல் உள்ளாடைகளுடன் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் இதைப் பார்க்கத் தான் ரசிகர்கள் வருவார்கள் என ஆபாசமாகப் பேசினார்" என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விஷயத்தை அந்த இயக்குநர் என்னிடம் சொல்லவில்லை. என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் சொன்னார். அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம்" என்றார். பின்பு தனது அப்பாவின் அறிவுறுத்தலின் படி அப்படத்திலிருந்து விலகிவிட்டேன். மொத்தம் 2 நாட்கள் நடித்திருந்த நிலையில் அதற்கான செலவுகளை படக்குழுவிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த இயக்குநர் பெயரை பிரியங்கா சோப்ரா சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.

 

 

Next Story

நடிகை பரினீதி சோப்ரா & ராகவ் சதா எம்.பி நிச்சயதார்த்தம் - பிரபலங்கள் வாழ்த்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Actress Parineeti Chopra Gets Engaged To Aam Aadmi Party Leader Raghav Sada Celebrities Congratulate

 

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும்  ராகவ் சதா எம்.பியு நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் உறுதிசெய்யப்பட்டு இன்று (13.05.2023) நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் நடைபெறுகிறது. 

 

மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளின் நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 150 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதற்காக அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு வந்து கபுர்தலா இல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

 

நிச்சயதார்த்த மோதிரம் 8 மணியளவில் மணமக்கள் மாற்றி கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு பாலிவுட் திரை பிரபலங்கள் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.