Skip to main content

கணவரை விவாகரத்து செய்கிறாரா ப்ரியங்கா சோப்ரா?

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

is priyanka chopra part ways with her husband

 

கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் முழுக்க முழுக்க பாலிவுட்டில் நடித்து உச்ச நட்சத்திரமானார். ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரைத் திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா தனது அன்றாட நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்து பதிவிடுவார். 

 

இந்நிலையில், நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோன்ஸை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ப்ரியங்கா சோப்ரா, சமூகவலைதளப் பக்கத்தில் தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் கணவர் பெயரை நீக்கியுள்ளார். சமீபத்தில், நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அதற்கு முன்பு சமந்தா சமூக வலைதளப் பக்கத்தில் தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சமந்தாவை போல ப்ரியங்கா சோப்ராவும் தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளதால் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற கோணத்தில் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்துவருகின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ விளக்கமும் ப்ரியங்கா சோப்ரா தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஆடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தினார்" - பிரியங்கா சோப்ரா பகீர் குற்றச்சாட்டு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

priyanka chopra accusses bollywood film director

 

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 

 

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் நடக்கும் அனுபவங்கள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பேசி வருகிறார். அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்களையும் பகிர்ந்திருந்தார். அண்மையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக பாலிவுட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 

 

இதனை ஒரு ஆங்கில ஊடகத்தில் சொன்ன அவர், இது பற்றி விரிவாகக் கூறுகையில், "2002-2003 ஆம் ஆண்டுகளில் ரகசிய ஏஜெண்ட்டாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஒரு ஆணை வசியம் செய்ய வேண்டும். அதில் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளுடன் அந்த நபரை மயக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். அதனால் ஸ்கின் ட்ரெஸ் (Skin dress) அணிந்து கொண்டு நடிப்பதாகச் சொன்னேன். ஆனால், அந்த இயக்குநர் ஸ்கின் ட்ரெஸ் இல்லாமல் உள்ளாடைகளுடன் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் இதைப் பார்க்கத் தான் ரசிகர்கள் வருவார்கள் என ஆபாசமாகப் பேசினார்" என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விஷயத்தை அந்த இயக்குநர் என்னிடம் சொல்லவில்லை. என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் சொன்னார். அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம்" என்றார். பின்பு தனது அப்பாவின் அறிவுறுத்தலின் படி அப்படத்திலிருந்து விலகிவிட்டேன். மொத்தம் 2 நாட்கள் நடித்திருந்த நிலையில் அதற்கான செலவுகளை படக்குழுவிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த இயக்குநர் பெயரை பிரியங்கா சோப்ரா சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.

 

 

Next Story

நடிகை பரினீதி சோப்ரா & ராகவ் சதா எம்.பி நிச்சயதார்த்தம் - பிரபலங்கள் வாழ்த்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Actress Parineeti Chopra Gets Engaged To Aam Aadmi Party Leader Raghav Sada Celebrities Congratulate

 

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும்  ராகவ் சதா எம்.பியு நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் உறுதிசெய்யப்பட்டு இன்று (13.05.2023) நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் நடைபெறுகிறது. 

 

மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளின் நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 150 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதற்காக அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு வந்து கபுர்தலா இல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

 

நிச்சயதார்த்த மோதிரம் 8 மணியளவில் மணமக்கள் மாற்றி கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு பாலிவுட் திரை பிரபலங்கள் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.