Skip to main content

"நான் கனவு கண்ட கதாபாத்திரம்" - விக்ரம் குறித்து பாராட்டிய பிரபல நடிகர்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

prasanna praised a vkram character in ponniyin selvan

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு. 

 

இதனிடையே விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் குறித்து ஒரு சிறிய ப்ரோமோவை படக்குழு பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோவை நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "நான் ஒரு நடிகனாக வேண்டும் என்று கனவு காணத் தொடங்கிய நாளிலிருந்து, குதிரையில் சவாரி செய்யும் ஒரு போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு இலக்கு இருக்கும். நான் கனவில் கண்ட கதாபாத்திரத்தை தற்போது படத்தில் பார்க்கவுள்ளேன். விக்ரம் சார் சிறப்பாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்துகிறார். கனவு என்றாவது ஒரு நாள் நனவாக வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓசாகா திரைப்பட விழா; விருதுகளைக் குவித்த கமல், மணிரத்னம் படங்கள்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
osaka tamil international award winners list

தமிழ்த் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் மற்றும் தமிழ்ப் படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் விதமாக ஜப்பானில் ஓசாகா தமிழ் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 ஆகிய இரு படங்களும் 8 விருதுகள் வென்றுள்ளன. 

சிறந்த தமிழ் திரைப்படம் - விக்ரம் 
சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (விக்ரம்) 
சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (சாணிக் காயிதம்)
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (விக்ரம்)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த இயக்குநர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த திரைக்கதை - ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)
சிறந்த புரொடக்ஷன் ஹவுஸ் - மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்‌ஷன்ஸ் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த நடன அமைப்பு - ஜானி மாஸ்டர் (அரபிக் குத்து - பீஸ்ட்)
சிறந்த துணை நடிகர் - ஃபகத் பாசில் (விக்ரம்) 
சிறந்த துணை நடிகை - ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த பொழுதுபோக்காளர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)
சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி (விக்ரம்)
சிறந்த படத்தொகுப்பு - ஃபிலோமின் ராஜ் (விக்ரம்)
சிறந்த சண்டை அமைப்பு - அன்பறிவ் (விக்ரம்)
சிறந்த கலை அமைப்பு - தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் -1)
சிறந்த விஎஃபெக்ஸ் குழு - என்.ஒய் விஎஃபெட்க்ஸ் வாலா (பொன்னியின் செல்வன் -1)
சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் சிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் -1)
சிறப்பு விருது -  லவ் டுடே

Next Story

பூஜையுடன் தொடங்கிய ‘பைசன்’ படப்பிடிப்பு (புகைப்படங்கள்)

Published on 06/05/2024 | Edited on 06/05/2024

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இனைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. போஜை விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக விக்ரமும் கலந்து கோண்டார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்ப தொடங்கி வைத்தார்.